ராசிபுரம், ஆக.19:ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் அக்கரைபட்டியில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. 47 பருத்தி மூட்டை விற்பனைக்கு வந்திருந்தது. ஆர்.சி.எச் ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால், ரூ.6500க்கும், அதிகபட்சமாக ரூ.7300க்கும் விற்பனையானது. சுரபி ரகம் குறைந்தபட்சமாக ரூ.9689க்கும், அதிகபட்சமாக ரூ.9729க்கும், கொட்டு பருத்தி குறைந்தபட்சம் ரூ.4700க்கும், அதிகபட்சமாக ரூ.5000க்கும் விற்பனையானது. மொத்தமாக 47 மூட்டைகள் ரூ.1.50 லட்சத்துக்கு விற்பனையானது. பருத்தியை அவிநாசி, அன்னூர், ஆத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.
+
Advertisement