நாமக்கல், நவ.18: ராசிபுரம் தாலுகா, கார்கூடல்பட்டி ஊராட்சி மெட்டாலாவை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலககம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மெட்டாலா பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, ஒரு தனிநபர் கட்டிடம் கட்ட முயன்றார். இதுகுறித்து வருவாய்த் துறைக்கு நான் தகவல் கொடுத்தேன். இதனால் அவர்கள் என்னை தாக்கினார்கள். இதுகுறித்து ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், என் மீது வழக்குபதிவு செய்வோம் என போலீசார் மிரட்டுகின்றனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,’ என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாலமுருகனை, போலீசார் சமாதானம் செய்து, எஸ்பி அலுவலகத்தில் சென்று புகார் அளிக்கும்படி அனுப்பி வைத்தனர்.
+
Advertisement


