Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு

நாமக்கல், நவ. 18: நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஜல்லிக்கட்டு விழா குழுவினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருமப்பட்டி ஒன்றியம், பொன்னேரி கைகாட்டியில் வரும் ஜனவரி 18ம்தேதி நடந்த ஊர் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்காக 2 பேரின் பட்டா இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதனால் ஜல்லிகட்டு விழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.