மல்லசமுத்திரம், செப்.18: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 249 மூட்டை பருத்தியை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் சுரபி ரகம் குவிண்டால் ரூ.6499 முதல் ரூ.8211 வரையிலும், பிடி.ரகம் ரூ.6109 முதல் ரூ.8011 வரையிலும், கொட்டு பருத்தி ரூ.4399 முதல் ரூ.6599 வரையிலும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.5.38 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 24ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement