குமாரபாளையம், செப். 18: தந்தை பெரியாரின் 147வது பிறந்த தினவிழா, குமாரபாளையத்தில் நடந்தது. நகர திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, வர்த்தகரணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை இணைந்து, பெரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரணை துணை அமைப்பாளர் விடியல் பிரகாஷ் தலைமை வகித்து பேசினார். இந்நிகழ்வில் திமுக தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகர், நிர்வாகிகள் ரவி, திராவிடர் கழக நகர செயலாளர் சரவணன், தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் சாமிநாதன், இலக்கிய தளம் அன்பழகன், மதிமுக நகர செயலாளர் நீலகண்டன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நஞ்சப்பன், பாலசுப்பிரமணியம், பஞ்சாலை சண்முகம், மதிமுக விஸ்வநாதன், ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
+
Advertisement