திருச்செங்கோடு, அக். 17: தமிழ்நாடு அரசு நடத்திய பனை விதை நடும் விழா, திருச்செங்கோடு வட்டூர் ஏரியில் நடைபெற்றது. தமிழகத்தின் மாநில மரமான பனை மரம் வளர்ப்பதின் முன்னெடுப்பாக திருச்செங்கோடு வட்டூர் ஏரியில் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் முன்னிலை வகித்தார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி., மாதேஸ்வரன் எம்பி., எம்எல்ஏக்கள் ஈஸ்வரன், ராமலிங்கம், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, கமிஷனர் வாசுதேவன், ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் பனை விதைகளை நட்டு, இந்த பணியை துவக்கி வைத்தனர்.
+
Advertisement