நாமகிரிப்பேட்டை, செப்.17: வெண்ணந்தூர் அருகே, தேங்கல்பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில், மகளிர் உரிமைத் தொகை வேண்டி 900க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர். மேலும், முதியோர் தொகை, விதவை சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா விண்ணப்பித்தனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். நிகழ்ச்சியில் தாசில்தார் சசிகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வனிதா, கிருஷ்ணன், ஒன்றிய திமுக துணை செயலாளர் தமிழ்மணி, பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி ரவீந்தர், மாவட்ட அயலக அணி விஜயபாஸ்கரன், நிர்வாகிகள் கனகராஜ், கீதா, சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement