நாமக்கல், அக்.16: ஊதிய உயர்வை அமல்படுத்தக்கோரி, நாமக்கல்லில் நேற்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல்லில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கட சுப்பிரமணியன், பொருளாளர் குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வங்கிகளையும் தேசிய மயமாக்க வேண்டும். தனியார் வங்கிகளில் போதுமான ஊழியர்களை பணியமர்த்த வேண்டும். வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வங்கி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி கோஷமிட்டனர்.
+
Advertisement