மல்லசமுத்திரம், ஆக. 15: மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார் மற்றும் செயல் அலுவலர் மூவேந்தரபாண்டியன், டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். இதில், மல்லசமுத்திரம் பஸ் நிலையம் அருகேயுள்ள கடையின் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 580 கிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர், அப்பகுதியில் செயல்படும் மளிகை, பேக்கரி, பெட்டி கடை என பல்வேறு கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், 55 கிலோ பறிமுதல் செய்தனர். இதற்கு ரூ.8500 அபராதமாக விதித்து வசூல் செய்யப்பட்டது.
+
Advertisement