ராசிபுரம், ஆக.15: மக்களை தேடி மக்கள் தலைவர் எனும் தலைப்பில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ‘தமிழக மக்களுக்காக கேப்டன் பல்வேறு திட்டங்களை செய்து இருக்கிறார். பெண்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கேப்டன் அறிவித்திருந்தார். அதனை தமிழக அரசு, தாயுமானவர் திட்டம் என கையில் எடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது,’ என்றார். இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement