ராசிபுரம், அக்.13: ராசிபுரம் அருகே உள்ள பட்டணத்தில் கலாம் பசுமை இயக்கம் மற்றும் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழாவினை கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு கலாம் பசுமை இயக்கத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து பேசினார். பொருளாளர் சக்திவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன், அனைத்து வித்யாலயா பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்க இணை செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்று மரம் நடும் பணியின் முக்கியத்துவம் குறித்து பேசினர். தொடர்ந்து பசுமை இயக்கத்தினர், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்