திருச்செங்கோடு, அக்.13: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர குழு சார்பில், சேகுவேரா 58ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சுகுமார், வெங்கடேஷ் ஆகியோர், சேகுவாரா வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி, நகர துணை செயலாளர்கள் கார்த்திக், கோபிராஜ், நகர பொருளாளர் தண்டபாணி, திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் முரளிகிருஷ்ணன், நகர குழு உறுப்பினர்கள் மன்னாதன், முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
+
Advertisement