திருச்செங்கோடு, அக்.13: திருச்செங்கோட்டில் நடைபெற்ற சன்மார்க்க சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் திருவள்ளுவர் விழா, பாரதியார் விழா, வள்ளலார் விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவிற்கு வித்யா விகாஸ் கல்வி நிறுவனங்களின் மேலாண் இயக்குனர் சிங்காரவேல் தலைமை வகித்தார். திருச்செங்கோடு பாவடி நாட்டாண்மைக்காரர்கள் மனோகரன், ரவிக்குமார், சுப்ரபாதம், மருத்துவர் கணேசன், சன்மார்க்க சங்க நிர்வாகிகள் சீனிவாசன், மோகன்தாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சன்மார்க்க சங்கத்தின் பொருளாளர் ராஜேஸ்வரன் வரவேற்றார். திருவலிதாயம் திருநெறிய சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. நாயன்மார்கள் குறித்த நாடக நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. சன்மார்க்க சங்க தலைவர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.