சேந்தமங்கலம், செப்.13: சேந்தமங்கலம் அருகே ராகவேந்திரா பிருந்தாவன் கோயிலில் குரு வார வழிபாடு விழா நடந்தது. சேந்தமங்கலம் ஒன்றியம் அக்கியம்பட்டி கிராமத்தில் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் உள்ளது. ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. நேற்று ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான லட்சுமி, நரசிம்மர் விநாயகர், ராமர்- சீதை, மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பால், தயிர், தேன் பஞ்சாமிர்தம், பன்னீரால் அபிஷேகம் செய்து பூஜைகள் நடந்தது. சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, முத்துகாப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
+
Advertisement