நாமக்கல், செப்.12: நாமக்கல்லில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பின்னர், மாலையில் திடீரென மேகங்கள் திரண்டு, மழை பெய்ய துவங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு பெய்த தொடர் மழையினால், பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் பள்ளமான பகுதியில் மழை நீர்தேங்கி நின்றது. இதில் அதிகபட்சமாக புதுச்சத்திரத்தில் 43 மிமீ, சேந்தமங்கலம் 41, திருச்செங்கோடு 36.4, கலெக்டர் அலுவலகம் 28, ராசிபுரம், எருமைப்பட்டி தலா 5, கொல்லிமலை 2, நாமக்கல் 6 என மொத்தம் 188.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வயல்களில் பயிர்களை மூழ்கடித்தும் காணப்பட்டது. மேலும், மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
+
Advertisement