நாமக்கல், செப். 12: சேலம் அண்ணா நிர்வாக கல்லூரி சார்பில், மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான முன் ஓய்வு தொடர்பான மூன்று நாள் பயிற்சி வகுப்பு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில் நடந்தது. பயிற்சி வகுப்பை சேலம் அண்ணா நிர்வாக கல்லூரியின் துணை ஆட்சியர் மாறன் மற்றும் உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பயிற்சியில் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்கள், ஓய்வு காலங்களில் பணப்பலனை எவ்வாறு கையாள்வது மற்றும் உடல் நலனை பாதுகாப்பது குறித்த உளவியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு, ஓய்வு காலத்தில் உடல் நலனைக் காக்க யோகா உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் ஓய்வுக்கான பண பலன்களை எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்தும் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.
+
Advertisement