கிருஷ்ணகிரி, டிச.11: பர்கூரை சேர்ந்த வாலிபரிடம், பணம் இரட்டிப்பு செய்து தருவதாக ரூ.48 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மாட்ரஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முத்து (33). இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி, டெலிகிராம் மூலம் குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், குறைந்த அளவிலான பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி அதில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு முத்து பேசியுள்ளார். பின்னர், அவர்கள் கூறியபடி 2 வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக, ரூ.48 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்தவித இரட்டிப்பு லாபமும் கிடைக்கவில்லை. மேலும் சம்பந்தப்பட்ட செல்போன் நம்பரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுபற்றி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
+
Advertisement


