பள்ளிபாளையம், செப்.11: பள்ளிபாளையம் கீழ்காலனி பகுதியில் கீதா-சீனி தம்பதியினர் கடந்த 15 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வந்தனர். கடந்த 7ம்தேதி இந்த ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. பெரும் பொருட்சேதத்திற்குள்ளான நிலையில் இந்த தம்பதியினரை திருச்செங்கோடு நகர ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், அருள்ராஜ், மாரியப்பன், ஆனந்த் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சங்கத்தின் சார்பாக ரூ.10 ஆயிரம் உதவித்தொகை அளித்தனர். மீண்டும் ஓட்டலை புதுப்பித்து நடத்த மேஜை, கிரைண்டர், மோட்டார் போன்ற பொருட்கள் தேவைப்பட்டால் உதவுவதாக உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தனர்.
+
Advertisement