சேந்தமங்கலம், அக்.10: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே களங்காணி பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜா(38). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து ஆத்தூருக்கு புறப்பட்டார். பேளுக்குறிச்சி வழியாக கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி அருகே ஒரு வளைவில் திரும்ப முயன்ற போது, எதிரே செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்ட முத்துராஜா தலையில் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து லாரியை ஓட்டி வந்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பாரதி(30) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement