சேந்தமங்கலம், செப்.10: சேந்தமங்கலத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் வீரசுந்தரலிங்கம், இம்மானுவேல் சேகரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்துல் கலாம் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராஜா கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நிர்வாகிகள் கர்ணன், ராஜா, ராகவன் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் செல்வராஜ், முருகேசன், அம்மையப்பன், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement