ராசிபுரம், அக்.9: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி சைனீயர் திருமண மண்டபத்தில், 14, 16வது வார்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமில், ஜாதி சான்று, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் தகுதி வாய்ந்த விடுபட்டவர்கள் பயன்பெற, மருத்துவ காப்பீடு பெற, ஆதார் அட்டை, ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய என 11 துறைகளுக்கான 500க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர். முகாமில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு, மனுக்களை ஆய்வு செய்து, விரைந்து உத்தரவுகளை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராசிபுரம் திமுக நகர செயலாளர் சங்கர், நகர்மன்ற தலைவர் கவிதாசங்கர், தாசில்தார் சசிகுமார், நகர்மன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.