மல்லசமுத்திரம், ஆக.9:திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. 57 மூட்டைகள் ரூ.3.74. லட்சத்திற்கு விற்பனையானது. இதில் முதல்தரம் ரூ.140 முதல் ரூ.195.25 வரையிலும், இரண்டாம் தரம் ரூ.110.10 முதல் ரூ.128 வரை ஏலம் நடந்து. பல்வேறு மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். அடுத்த ஏலம் 22ம்தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement