சேந்தமங்கலம், அக்.8: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே திருமலைப்பட்டி பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்பட்டு வருவதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், எஸ்ஐ சங்கீதா மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, மது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன்(56) என்பவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மதுபாட்டில்களை கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement