நாமக்கல், அக்.8: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்புமணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
+
Advertisement