நாமக்கல் நவ.7: நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக, கடந்த 4 ஆண்டாக பணியாற்றி வந்த மகேஸ்வரி, சேலம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த எழிலரசி (58), பதவி உயர்வு பெற்று நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், நேற்று நாமக்கல் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய முதன்மை கல்வி அலுவலருக்கு, கல்வித் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
+
Advertisement

