நாமக்கல், டிச.6: நாமக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று சரக்கு ரயில் மூலம், கோழித்தீவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 600 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரயிலில் நாமக்கல் வந்தது. கோழிதீவனம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக கடுகுபுண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. சரக்கு ரயிலில் வந்த லோடை லாரி உரிமையாளர்கள், லாரிகளில் ஏற்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணை தீவன தயாரிப்பு ஆலைகளுக்கு கொண்டு சென்றனர்.
+
Advertisement

