மல்லசமுத்திரம், டிச.6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்றைய ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து 60 கிலோ எடை கொண்ட 37 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.130.50 முதல் ரூ.180.50 வரையிலும், 2ம் தரம் ரூ.96.90 முதல் ரூ.110.10 வரையிலும் மொத்தம் ரூ.2லட்சத்து 14ஆயிரத்து 929க்கு கொப்பரை ஏலம் போனது. ஈரோடு, காங்கேயம், அவினாசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த ஏலம் வரும் 12ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement

