நாமக்கல், நவ.5: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் 450 மூட்டை பருத்தியை கொண்டு வந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்காணபுரம், ஈரோடு, அவிநாசி, திருப்பூர், வேடசந்தூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.7429 வரையும், மட்ட ரக கொட்டுப்பருத்தி ஒரு குவிண்டால் ரூ.4289 வரையும் ஏலம் போனது. மொத்தம் ரூ.10லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
+
Advertisement
