நாமக்கல், நவ.5: முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினர் இலவச தையல் இயந்திரம் பெற நவம்பவர் 25க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, விதவையர், திருமணம் ஆகாத மகள்கள் இருப்பின், மத்திய, மாநில அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று, அதன் வாயிலாக இலவச தையல் இயந்திரம் ஏதும் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 25ம் தேதிக்குள் உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், நாமக்கல் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான தகுதிகளாக, பிறப்பால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், அதிகபட்ச வயது 40க்குள்ளும் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளிடமிருந்து தையல் இயந்திரங்கள் பெற்றவராக இருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது 3 மாதங்கள் பயிற்சி பெற்று உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பெயர் பதிவு செய்திருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
