நாமக்கல், நவ.5: நாமக்கல்-திருச்சி ரோட்டில் தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலில் லிப்ட் வசதி உள்ளது. இந்நிலையில், அங்கு பணிபுரியும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹரேஷ்(34) என்பவர் முதல் தளத்திற்கு செல்ல லிப்டில் ஏறியுள்ளார். அவருடன் ஓட்டலுக்கு சாப்பிட வந்த துத்திகுளத்தைச் சேர்ந்த அசோக்குமார்(42) என்பவரும் லிப்டில் சென்று உள்ளார். அப்போது, சேப்டி பின் திடீரென உடைந்ததால் இருவரும் லிப்டில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், நிலைய உதவிஅலுவலர் தவமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் லிப்டை தூக்கி அதில் சிக்கிக்கொண்ட அசோக்குமார், ஹரேஷ் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement
