திருச்செங்கோடு, டிச.4: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியில், வணிக நிர்வாகவியல் துறை, வணிகவியல் துறை, தொழில் முனைவோர் புத்தாக்க பிரிவு மற்றும் நிறுவன புத்தாக்க சபை ஆகியவற்றின் சார்பில், தொழில்முனைவோர் பணிமனை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நாமக்கல் கலை இயக்குனர் பழனிவேல் கலந்து கொண்டு, கலைத்துறையில் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்குவது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினார். கல்லூரியின் செயலாளர் ரமணிகாந்தன் முகாமிற்கு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். நிறுவன புத்தாக்க சபை சமூக ஊடக ஒருங்கிணைப்பாளரும் வணிக நிர்வாகவியல் துறை தலைவருமாகிய மெய்ஞானம் வரவேற்றார். வணிகவியல் துறை தலைவர் யாழினி நன்றி கூறினார். நிறுவன புத்தாக்க சபை தலைவரும், கணினி பயன்பாட்டியல் துறை தலைவருமாகிய பிரேமா, வணிகவியல் துறை உதவிபேராசிரியர் சரவணகுமார், கௌரவ விரிவுரையாளர் கோகுல்நாத், வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் பூர்ணிமா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் மாணவ, மாணவிகள், அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement

