நாமக்கல், நவ.1: நாமக்கல் மாநகர காங்கிரஸ் சார்பில், நேரு பூங்காவில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்து இந்திரா காந்தி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். மாநகர தலைவர் மோகன், கொல்லிமலை வட்டார காங்கிரஸ் தலைவர் குப்புசாமி, நாமக்கல் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் சாந்தி மணி, தாஜ், ஐஎன்டியூசி செல்வம், பாலு, பழனிவேலு, மாநகர நிர்வாகிகள் செல்வம், மதிவாணன், சிவாஜி மன்றம் சந்திரசேகர், லோகநாதன், குமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement
