நாமகிரிப்பேட்டை, நவ.1: வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் அருகேயுள்ள வடுகபாளையம் பகுதியில் இருந்து, மல்லூர் செல்லும் சாலையில், சேதமடைந்த நிலையில் மின்கம்பம் இருந்தது. இந்த மின்கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பாக மின்கம்பத்தை மாற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து படத்துடன் செய்தி தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதையடுத்து பழுதடைந்த கம்பத்தை ஆய்வுசெய்த மின் வாரிய அதிகாரிகள், சேதமடைந்த பழைய கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை வைத்துள்ளனர். இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.
+
Advertisement
