நாமக்கல், ஜூன் 19: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், இயற்பியல் துறை சார்பில், இயற்பியல் பட்டதாரிகளுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. துறைத்தலைவர் சின்னுசாமி வரவேற்று பேசினார். முதல்வர் (பொ) ராஜேஸ்வரி தலைமை உரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கிரிராஜ் கலந்து கொண்டு, மருத்துவம் மற்றும் பிற துறைகளில் இயற்பியலின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, இயற்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். இதில் இயற்பியல் துறையின் இளம் அறிவியல், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


