நாமக்கல், ஜூலை 26: நாமக்கல்லில் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.
செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஊதிய குழுவால் வழங்கப்படும் உரிமைகளை பறிக்கும் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும். 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்’ போன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.