சேந்தமங்கலம், ஜூலை 31: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த எஸ்.நாட்டாமங்கலம் கிராமத்தில், மோர் தாண்டிய அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கோயிலின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பூஜை செய்யும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
+
Advertisement