திருச்செங்கோடு, ஜூலை 30: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், எள் 74 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதில் கருப்பு எள் கிலோ ரூ.112.80 முதல் ரூ.142.90 வரையிலும், சிவப்பு எள் ரூ.60.80 முதல் ரூ.124.90 வரையிலும், வெள்ளை எள் ரூ.79 முதல் ரூ.130.60 வரை விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.5.25 லட்சத்திற்கு எள் விற்பனையானது. பருத்தி 240 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் பிடி ரகம் குவிண்டால் ரூ.6969 முதல் ரூ.8009வரை விற்பனையானது. சுரபி ரகம் ரூ.10052 முதல் ரூ.9879வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.6.14லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
+
Advertisement