பரமத்திவேலூர், ஆக.2: ரமத்தி வேலூரை அடுத்த அணிச்சம்பாளையம் பகுதியில் பாய் தயாரிக்கும் கோரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோரை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்....
பரமத்திவேலூர், ஆக.2: ரமத்தி வேலூரை அடுத்த அணிச்சம்பாளையம் பகுதியில் பாய் தயாரிக்கும் கோரை வளர்க்கப்பட்டு வருகிறது. கோரை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் காரணமாக தீ மளமளவென பரவியது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. இதையடுத்து புகளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, கோரையில் பற்றிய தீயை அணைத்து கட்டுப்படுத்தி, தீ அருகேயுள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது. இருப்பினும் ஒரு ஏக்கர் கோரை தீயில் எரிந்து நாசமானது.