மல்லசமுத்திரம், ஆக.1: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் 1646 மூட்டைகள் கருமனூர், கோட்டப்பாளையம், மாமுண்டி, மதியம்பட்டி, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்து தரம் வாரியாக குவித்தனர். ஏலம் எடுக்க சேலம், ஈரோடு, கோவை, அவினாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த...
மல்லசமுத்திரம், ஆக.1: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் 1646 மூட்டைகள் கருமனூர், கோட்டப்பாளையம், மாமுண்டி, மதியம்பட்டி, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொண்டு வந்து தரம் வாரியாக குவித்தனர். ஏலம் எடுக்க சேலம், ஈரோடு, கோவை, அவினாசி ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் சுரபி ரகம் குவிண்டால் ரூ.8001 முதல் ரூ.10381 வரையும், பி.டி. ரகம் ரூ.7163 முதல் ரூ.7913 வரையும், கொட்டு பருத்தி ரூ.4309 முதல் ரூ.6509 வரை ஏலம் போனது. இதில் ரூ.50.52 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.