நாமகிரிப்பேட்டை, ஆக.1: நாமகிரிப்பேட்டை அடுத்த ஆயில்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு ஒரு நாள் கால்நடை வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை அருகே ஆயில்பட்டி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம், மாவட்டத்திற்குள் விவசாயிகள் ஒரு நாள் கால்நடை வளர்ப்பு பற்றிய பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தலைமை உரையாற்றினார். கால்நடை மருத்துவர் இளையராஜா கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி சிறப்புரை ஆற்றினார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீதரன் இயற்கை விவசாயம் பற்றியும், உழவன் செயலி பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். ஈசா மரக்கன்று பிரிவு மேலாளர் ராஜா, பயிர் காப்பீட்டு பணியாளர் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பயிர் காப்பீடு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ், வர்ஷா ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement