Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஜெர்மன் மொழித்தேர்வு பயிற்சி

நாமக்கல், ஆக.3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஜெர்மன் மொழித்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான தகுதிகளாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பிஎஸ்சி நர்சிங், பொது நர்சிங் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 35 வயதுக்குள் இருக்கவேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். இந்த பயிற்சிக்கான காலம் 9 மாதங்களாகும். மேலும், விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவின தொகை தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சி முடித்தவுடன், பயிற்சி அளித்த நிறுவனம் மூலம் ஜெர்மனி நாட்டில் பணிபுரிய தகுதியானோர் அனுப்பி வைக்கப்படுவர். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தையோ அல்லது 04286-291178, 94450 29508 ஆகிய எண்களையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்