மல்லசமுத்திரம், செப்.4: சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டோரி ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ். இவரது மகன் கோகுல்நாத் (27). திருச்செங்கோட்டில், உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம், காலை சேலத்தில் இருந்து டூவீலரில் வேலைக்கு புறப்பட்டார். கள்ளுக்கடை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின்பேரில், மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த கோகுல்நாத்திற்கு சன்மதி(24) என்ற மனைவியும், சாய் ஸ்ரீ(4), மகாலட்சுமி 2 மாத பெண் குழந்தைகள் உள்ளனர்.
+
Advertisement


