மல்லசமுத்திரம், மே 23: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரம் தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடப்பது வழக்கம். இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக நேற்று நடைபெற இருந்த பருத்தி ஏலம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அடுத்த ஏலம் வருகிற 29ம் தேதி நடைபெறும் என சங்க மேலாளர் கணேசன் தெரிவித்தார்.
+
Advertisement


