பள்ளிபாளையம், ஜூலை 20: பள்ளிபாளையம் அருகே பாப்பம்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும், அரசு மேல்நிலைப்பள்ளியில் 477 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் கல்விப்பணிக்காக, தமிழக அரசு மூலம் ₹43லட்சம் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. காணொளி காட்சி மூலம் புதிய வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பாப்பம்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் இளங்கோவன், தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.
+
Advertisement


