திருச்செங்கோடு, அக். 26: கபிலர்மலை வடக்கு ஒன்றிய பகுதிகளை சேர்ந்த அதிமுகவினர் 12 பெண்கள் உள்பட 36 பேர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம் ஏற்பாட்டில் நேற்று, திருச்செங்கோட்டில் உள்ள மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்திக்கு சால்வை அணிவித்து, மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் திமுக துண்டு அணிவித்து வாழ்த்தினார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்ல வேண்டும் என்ற முதலமைச்சர் ஆணைக்கு செயல் வடிவம் கொடுக்க, அனைவரும் தீவிர களப்பணி ஆற்றவேண்டும் என மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி கேட்டுக்கொண்டார்.
+
Advertisement
