பள்ளிபாளையம், அக்.12: குப்பாண்டபாளையம் ஊராட்சி மொளசி முதல், காந்தி நகர் வரை ரூ.44 லட்சம் மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் துவங்கியது. பள்ளிபாளையம் ஒன்றியம், குப்பாண்டபாளையம் ஊராட்சியில் மொளசி முதல் காந்தி நகர் வரையிலான 800 மீட்டர் தூரத்திற்கு, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான கால்கோள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அட்மா திட்ட தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். பள்ளிபாளையம் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் செல்வம், இளங்கோவன் ஆகியோர் பங்கேற்று, சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேலுமணி, மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சௌந்தரம், மேட்டுகடை கார்த்தி, மாணவரணி திமுக அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement