ராசிபுரம், ஆக.11: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவரியாக பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை தொடர் மழையின் காரணமாக நன்கு வளர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில ஒரு பகுதி காவிரி கரையோர பகுதியாகவும், ஒரு பகுதி வானம் பார்த்த பூமியாகவும், கிணற்று பாசன வசதிகளை கொண்டுள்ளது. அந்த வகையில் ராசிபுரம், வெண்ணந்தூர், அத்தனூர், புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், காக்காவேரி, பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மானாவரி பயிர்களை பயிரிட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலக்கடலை பயிரிட்ட நிலையில், தற்போது மழை விட்டு விட்டு பெய்து வருவதால், செடிகள் செழித்து வளர்கிறது. பயிருக்கு தேவையான உரம் மற்றும் களை எடுப்பு பணிகளை விவசாயிகள் முறையாக செய்துள்ளதால், நிலக்கடலை செழித்து வளர்ந்து தற்போது காய் பிடித்து வருகிறது. இதனால், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.