குமாரபாளையம், ஆக.11: ஈரோடு புத்தக்கண்காட்சிக்கு அரசு பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.ஆண்டுதோறும் ஈரோட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு குமாரபாளையம் அரசு பள்ளிக்குழந்தைகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த ஆண்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். தனி வாகனங்களில் புறப்பட்ட பள்ளி குழந்தைகளை விடியல் பிரகாஷ் வழி அனுப்பி வைத்தார்.
புத்தக கண்காட்சிக்கு வந்த குழந்தைகளை மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று, புத்தகங்களின் அருமை குறித்து விவரித்தார். கண்காட்சியில் பள்ளி குழந்தைகளுக்கு புத்தகங்களும், சேமிப்புக்கான உண்டியல்களும் வழங்கப்பட்டது. `மாணவ மாணவிகளை வழியனுப்பும் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மலர்விழி, பாரதி, கெளசல்யா, சுகந்தி, நவநீதி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளி குழந்தைகளை பஞ்சாலை சண்முகம், தீனா, ஆனந்த், தினேஷ், ராம்கி, செளந்தர், ஜமுனா, ராணி ஆகியோர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.