Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துணை மின்நிலைய பகுதிகளில் மின்நிறுத்தம் தேதி அறிவிப்பு

பள்ளிபாளையம், செப்.2:மின்வாரிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இந்த மாதம் மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் மற்றும் நாள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாட்களில் அப்பகுதியில் உள்ள துணை மின்நிலைய பகுதிகளில் உள்ள கம்பங்களில் மரக்கிளைகள் மோதுதல், மின்மாற்றிகளில் ஆயில் மாற்றம், தாழ்வான மின் கம்பிகள் சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். மின் பராமரிப்பு பணியின்போது, துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். நடப்பு(செப்டம்பர்) மாதத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகம் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று(2ம் தேதி) திருச்செங்கோடு துணை மின்நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. வரும் 9ம் தேதி(செவ்வாய்க்கிழமை) எருமப்பட்டி மற்றும் நல்லூர், கபிலர்மலை, உப்புபாளையம், வளையப்பட்டி, முசிறி ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. மறுநாள்(10ம் தேதி) ஆனங்கூர், மல்லசமுத்திரம் பகுதியில் மின் விநியோகம் இருக்காது.

11ம் தேதி கெட்டிமேடு, வில்லிபாளையம் பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே போல், 12ம் தேதி வாழவந்தி, மெட்டாலா, வெப்படை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 16ம் தேதி இளநகர், உஞ்சனை பகுதியிலும், 17ம் தேதி(புதன்கிழமை) நாமக்கல், சமயசங்கிலி, ராசிபுரம், மல்லூர் பகுதியிலும், 18ம் தேதி காளப்பநாயக்கன்பட்டி, குமாரபாளையம் பகுதியிலும், 20ம் தேதி பருத்திப்பள்ளி, சேந்தமங்கலம், பள்ளிபாளையம், ஏமப்பள்ளி, பரமத்திவேலூர் பகுதியிலும், 22ம் தேதி(திங்கட்கிழமை) நாமகிரிபேட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், 23ம் தேதி புதன்சந்தை, ஜேடர்பாளையம் பகுதிகளிலும், 25ம் தேதி பல்லக்காபாளையம் பகுதியிலும் 26ம் தேதி(வெள்ளிக்கிழமை) சோழசிராமணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.