நாகப்பட்டினத்தில் ரூ.2.81 கோடி மதிப்பில் 5,481 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பள்ளிகல்வித்துறை சார்பில் மீன்வளர்ச்சி கழக தலைவர் வழங்கினார்
நாகப்பட்டினம், நவ.15: நாகப்பட்டினத்தில் 5 ஆயிரத்து 481 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் மதிப்பிலான மிதிவண்டியை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழங்கினார். தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் நேற்று காரைக்குடியில் பள்ளிகல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடந்தது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். டிஆர்ஓ பவணந்தி தலைமை வகித்தார். கீழ்வேளூர் தொகுதி எம்எல்ஏ நாகைமாலி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரூ.2 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரத்து 760 மதிப்பில் 5 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் 54 உள்ளது. இந்த பள்ளிகளில் 2 ஆயிரத்து 740 மாணவர்களும், 3 ஆயிரத்து 101 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகள் மேல்நிலை வகுப்பில் படித்து வருகின்றனர். இவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மேலும் கல்வி வளர்ச்சி பெற வழங்கப்படுகிறது. மொத்தம் 5 ஆயிரத்து 841 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 81 லட்சத்து 86 ஆயிரத்து 769 மதிப்பில் மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது என்றார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் அண்ணாதுரை, சத்தியவாணி, தமயேந்தி, முகம்மதுநத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் பிரேமா நன்றி கூறினார்.
